கிளிநொச்சி, இலங்கை வங்கிக் கிளையில் இரத்ததான நிகழ்வு!

இலங்கை வங்கியின் 78 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிளிநொச்சி இலங்கை வங்கிக்கிளையில் இரத்ததான நிகழ்வும், பயன்தரு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளது.

இலங்கை வங்கியின் 78 ஆவது ஆண்டு நிறைவு முன்னிட்டு நாடாளாவிய ரிதியில் உள்ள கிளைகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதில் சமுக நல வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, முல்லைத்தீவு வைத்தியசாலைகளுக்கான இரத்த வங்கிகளின் இரத்தத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்று வைபவரீதியான நிகழ்வில் சர்வமதத்தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் வங்கி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் எனப் பலரும் இரத்ததானம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You might also like