கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு அமைப்புக்களுடன் பொலிஸ் மா அதிபர் சந்திப்பு!

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர (செவ்வாய்க்கிழமை) சிவில் பாதுகாப்பு அமைப்புக்களுடன் கிளிநொச்சியில் சந்திப்பொன்றில் கலந்துகொண்டார்.

குறித்த சந்திப்பு  இரணைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும்பியசவில் இடம்பெற்றது.

மேற்படி சந்திப்பில் வட.மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், முல்லைத்தீவு அரசாங்க அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிவில் குழுக்கள், கிராம சேவையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின்போது இரு மாவட்டங்களையும் சேர்ந்த கிராம மட்ட பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like