வவுனியா மூன்றுமுறிப்பில் தாய் மீது கத்திவெட்டு : சங்கிலி அபகரிப்பு.

வவுனியாவில் நேற்று (01.08.2017) இரவு 10.30 மணியளவில்  பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அபகரித்துக்கொண்டு தாயாரின் கையை வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிலில் தப்பி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கண்டி வீதி, மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று (01.08.2017) இரவு 10.30 மணியளவில் தமது வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த போது வீட்டு வாசலில் உறவினர்கள் அழைத்தது போல் அழைத்தார்கள் அங்கே சென்ற பெண்ணிடம்  அணிந்திருந்த தங்கச் சங்கிலியை  அறுத்த சந்தர்பத்தில் கூக்குரல் இட்ட வேளை தாயார் அவ்விடத்திற்கு ஓடி வர தாயாரான பரமசிவம் ஷ்கந்தலோஜினி (வயது 60) என்பவரின் கையை வெட்டி விட்டு மகளின் ஒரு பவுண் (48,000) பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்து கொண்டு இரு இளைஞர்கள் தப்பித்து சென்றுள்ளார்கள்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் தங்களை இனங்காட்டி கொள்ளாத வகையில் முகத்தை மறைத்து கறுப்பு துணியால் கட்டியிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டிருந்தார்.

தாயார் தற்போது விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like