க.பொ.த. உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புக்களுக்குத் தடை!

க.பொ.த.உயர்தர பரீட்சையுடன் தொடர்புடைய அனைத்து வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் இன்று நள்ளிரவுடன் நிறுத்தப்பட வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

இதற்கமைய பகுதிநேர வகுப்புகள், கருத்தரங்குகள், வினாத்தாள் செயன்முறைகள், வினாத்தாள் அச்சிடல், விநியோகித்தல் போன்ற செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கும் என்றும் ,இதனை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like