யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டது ஏன்? காரணம் வெளியானது

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியமைக்கான காரணம் வெளியாகி உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் கோப்பாய் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

ஆவா குழுவில் இருந்து விலகிய உறுப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொண்டதன் பின்னர் தப்பியோடினோம். அதன்போது இந்த பொலிஸார் தம்மை சுற்றி வளைப்பதாக எண்ணி அவர்களை வாளினால் வெட்டினோம் என சந்தேக நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர்களினால் ஆவா குழு உறுப்பினர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டு காயமடைந்த நிலையில், காயத்துடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like