கிளிநொச்சியில் சைட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

சைட்டத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்து கிளிநொச்சியிலும்  கவனயீர்ப்பு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (02.08.2017) புதன் கிழமை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக மருத்துவா்கள் மற்றும் மருத்துவபீடம் மற்றும் பொறியியல் பீட மாணவா்கள் ஆகியோா் இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனா்.

சைட்டம் தனியாா் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனை நிறுத்த கோரியே இந்தக் கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண் எனும் அமைப்பினா் இதனை மேற்கொண்டுள்ளனா்.

சைட்டம் தனியாா் பல்கலைகழகத்தில் மருத்துவ பீடம், பொறியியல் பீடம், சட்ட துறை பீடம்  என பல பீடங்கள் உள்ள போதும், மருத்துவ பீடத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாட்டில்  போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like