கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் விபத்து வயோதிபத்தாய் ஒருவர் பலி

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் சேவியர் கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபத்தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் மீது, பின்னால் சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து இடம்பெற்றள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த கருணாநிதி சின்னம்மா என்ற வயோதிபத்தாயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like