வவுனியா பொலிஸ் நிலையத்தில் மலையக மக்களை இழிவுபடுத்தி பேசிய கச்சாய் சிவத்திற்கு எதிராக முறைப்பாடு

முகப்புத்தகத்தில் மலையக மக்களை இழிவுபடுத்தி பேசிய கச்சாய் சிவம் என அழைக்கப்படும் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் மலைய மக்களின் ஒன்றியம் இன்று வவுனியா பொலிஸ் நிலையமத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளனர்.

கச்சாய் சிவம் என அழைக்கப்படும் சிவகுமாரன் எனப்பட்ட யாழ்.கச்சாயைச் சேர்ந்த நபர் ஒருவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகின்றார். இவர் மலையக மக்களை இழிவுபடுத்தி, தரம்தாழ்த்தி பேசி அதனை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இது வேகமாக இணையங்களிலும், முகப்புத்தகங்களிலும் பரவிய நிலையில் இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வாழ் மலையக மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரின் செயற்பாட்டுக்கு எதிராக வடக்கு, கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும் மலையக மக்களை இழிவுபடுத்தி பேசியதாக தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like