சற்று முன் ஆரம்பமானது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் விசேட கூட்டம்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள், வடக்கு பதில் முதலமைச்சர் ஐங்கரநேசன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமாகி உள்ளது.
இந்த விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டு இருக்கும் வறட்சி நிலை தொடர்பில் ஆராயப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் திணைக்களத்தலைவர்கள் பொது அமைப்பின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.