பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் ஒரே நாளில் 2217 பேர் கைது

நாடு முழுவதும் குற்றங்கள் மற்றும் வாகன விபத்துக்களை அடிப்படையாக கொண்டு விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11 மணியில் இருந்து இன்று அதிகாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய சந்தேகத்தின் பேரில் 1056 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 651 பேரும், சந்தேக நபர்கள் 17 பேர், போதை பொருள் தொடர்பில் 357 பேரும் சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 258 பேரும், குடி போதையில் வாகனம் ஒட்டியமை தொடர்பில் 376பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் ஓட்டிய 291 பேரும் ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டிய 139 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

You might also like