கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு அண்மையில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கரைச்சிப்பிரதேச செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்தச் சம்பவம் தொடர்பாக நேற்றைய தினம் கணேசன் கம்சநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான பிரச்சினையால் மக்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதேச சபையினால் கழிவுகளை கொட்டுவதற்காக உமையாள்புரம் பகுதியில் ஏ-9 வீதியிலிருந்து புகையிரத வீதியை கடந்த இரண்டு கிலோமீற்றர் தொலைவில் காணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், சில தனியார் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடங்களில் கொட்டாது வேறுஇடங்களில் கொட்டுவதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இவ்வாறு தொடர்ந்தும் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரைச்சிப்பிரதேச செயலாளர் கணேசன் கம்சநாதன் தெரிவித்துள்ளார்.

You might also like