கிளிநொச்சியில் ‘விதைநெல்லை மானிய விலைகளில் பெற்றுத்தரவும்’ விவசாயிகள் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் 2017, 2018 காலபோகச் செய்கைக்கான விதைநெல்லை, மானிய விலைகளில் பெற்றுத்தருமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இவ்வாண்டு கடும் வரட்சி காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக செய்கைகள் அழிவடைந்துள்ளதுடன், சிறுபோகச்செய்கையின் போது 3,200 ஏக்கர் நிலப்பரப்பிலேயே சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதிலும், குடமுறுட்டிக்குளம், இரணைமடுக்குளம் ஆகியவற்றின் நீர் இன்மையால், சிறுபோகச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

“இந்நிலையில், அடுத்து காலபோகச்செய்கைக்கான காலம் அண்மித்துள்ளமையால், பயிர்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு விதைநெல், பாரிய பிரச்சனையாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளனர்.

You might also like