கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான 34.972 மி.ரூபாய் ஒதுக்கிடு

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில், இவ்வாண்டுக்கான பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான 34.972 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் ஒன்பது வேலைத்திட்டங்களுக்கு 21 மில்லியன் ரூபாயும் விவசாய அமைச்சின் கீழ் ஏழு வேலைத்திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபாயும் கமநல அபிவிருத்தித்திணைக்களத்தின் கீழ் பத்து வேலைத்திட்டங்களுக்கு 1.972 மில்லியன் ரூபாயும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் கீழ் ஒரு வேலைத்திட்டத்துக்காக 2 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

You might also like