கிளிநொச்சி – கண்டாவளையில் காணிகளின்றி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்

கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேசத்தில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு, காணிகளை வழங்க வேண்டிய தேவையிருப்பதாக, கண்டாவளைப்பிரதேச செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளைப்பிரதேசத்தில் உள்ள 16 கிராம  அலுவலர் பிரிவுகளில் சுமார் 8,314 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன.

“இப்பிரதேசத்தில் 2, 221 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே யுத்தத்தின் போது பிரதேச செயலகத்தில்  கோவையிடப்பட்டிருந்த ஆவணங்கள் தொலைந்தமையால் 1,142 பயனாளிகளுக்கான அனுமதிப்பத்திரங்களும் 332  பயனாளிகளுக்கான அழிப்புப்பத்திரங்களும் அலுவலகப்பிரதி ஆக்கம் செய்யப்பட்டுள்ளன.

“90 பயனாளிகளுக்கு  ஆவணங்களை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்கள் (காணிக்கச்சேரிகள்) மேற்கொள்ளப்படவுள்ளன. ஏற்கெனவே பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் 1,803 பேரும் அரச காணிகளில் 255 பேரும் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கான காணிகளையே வழங்கவேண்டியுள்ளது” என்றார்.

You might also like