பெண்களினால் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு

பெண்களினால் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ள கல்கிரியாகம பிரதேசத்தில் இவ்வாறு குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாரியளவில் இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் நடத்தப்பட்டு வந்துள்ளது.

ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் குறித்த உற்பத்திச்சாலையை சுற்றி வளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கோடா 62 பெரல் சீனி எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோத மதுபான உற்பத்திச்சாலையை நடத்திச் சென்ற பெண் ஜாஎல பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய வர்த்தகர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹபரத்தலாவ விவசாய கிராமத்தில் பாரிய காணி ஒன்றை மாதாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு இந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உற்பத்திச் சாலைக்குள் கிராம மக்கள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

மதுபானத்தை உற்பத்திச் செய்யும் பணிகளுக்காக ஹட்டன் லிந்துல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

You might also like