வவுனியா வேப்பங்குளம் பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையில் அமைந்துள்ள பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு வீ – 3 அமைப்பினர் இன்று 03.08.2017 வியாழக்கிழமை சுமார் 1500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

பாரதி முன்பள்ளி முகாமைத்துவ குழுவினர் வீ-3 அமைப்பிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாப்பாட்டுப் பெட்டி ,தண்ணீர் போத்தல் , சிறுவர்களுக்கான ஆங்கிலப்புத்தகங்கள் , வரைதல் கொப்பி , வெளிக்களக்கொப்பி , இயற்கையான களி , பைல் கவர் , சோக் கலர் பெட்டி , பென்சில் கலர் பெட்டி ,கம் போத்தல் என்பன கொண்ட பொதிகள் கொக்குவிலைச்சேர்ந்த லண்டன் வாழ் வீ -3 அமைப்பின் சமூக ஆர்வலர் திரு வி.விமல்ராஜ் அவர்களால்; அவரது பாரியார் திருமதி செல்வி விமல்ராஜ் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு வழங்கி வைத்தார் .

பாரதி முன்பள்ளி ஆசிரியர் திருமதி ச. மேரி மெற்றில்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு எஸ்.எஸ்.ஸ்ரீநிவாஸன் பிரதம விருந்தினராகக்கலந்து கொண்டார் . சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற அதிபர் திரு குருகுலசிங்கம் மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி தி .கலைவாணி வீ-3 அமைப்பின் வவுனியா உறுப்பினர்கள் திரு கே.உதயகுமார் திரு.எஸ்.புருசோத்தமன் , சமூக ஆர்வலர் த. தர்மராஜா ஆகியோருடன்; பெற்றோர்கள் மாணவர்களும் கலந்து கொண்டனர் .

உரைநிகழ்த்திய பிரதம விருந்தினர் செ.ஸ்ரீநிவாசன் ‘ சிறார்களின் கல்விக்கு உதவுவது சமூகத்தின் வளர்ச்சிக்கான சிறந்த முதலீடு. முன்பள்ளி சிறுவர்கள் சர்வதேச மட்டத்திற்கு ஏற்ற கல்வியைப்பெற்றுக்கொள்ள வேண்டும் . அதற்கான வசதிகளை எதிர்காலத்தில் பாரதி முன்பள்ளி பெற்றுக்கொள்ள வேண்டும் . இன்று அதன் அடிப்படைக் கற்றல் செயல்பாடுகளுக்கு உதவியுள்ள வீ-3 அமைப்பினர் பாராட்டத்தக்கவர்கள் . குறிப்பாக திரு வில்வராஜா விமல்ராஜ் பல சமூக செயற்பாடுகளுக்கு உதவி வருபவர் , அவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் ‘ என்றார் .

You might also like