வவுனியாவில் 122 ஆவது அறநெறி பாடசாலை தின விழா

இலங்கை சோசலிச குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் 122 ஆவது அறநெறி பாடசாலைகள்  தினத்தை நினைவு கூரும் விழா இன்று (03.08.2017) பிற்பகல் 2.00 மணியளவில் வவுனியா நகர கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பௌத்த சாசன பிரதி அமைச்சர் எச்.ஆர்.சாரதி துஸ்மந்த மித்திரிபால, பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமல் கொட்டவலகெதர, பௌத்த சாசன வலிமுரியாவே குசலதம்மதேரர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.றோகனபுஷ்பகுமார, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன், , வட மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெயதிலக, வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள், வவுனியா மாவட்ட சாசனாரக்ஷக அலுவலகர்கள், பாடசாலை அதிபர், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

You might also like