கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு 12 ஆயிரம் ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு 12 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் இரண்டு கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே ஒருவருக்கு ஏழாயிரம் ரூபாவும் மற்றையவருக்கு ஐயாயிரம் ரூபாவுமாக 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like