முல்லைத்தீவில் வறட்சியால் 30,000 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திலே வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான விபரங்களை கொழும்பிற்கு அனுப்பி உள்ளதாகவும் கொழும்பில் இருந்து கிடைக்கின்ற உதவிகளை வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் இடர் முகாமைத்துவப் பிரிவு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குடிநீர் நெருக்கடி காணப்படுகின்ற கிராமங்களில் பிரதேச செயலகங்களின் ஒழுங்குப்படுத்தலில் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like