வவுனியா பொலிஸாருடன் வர்த்தகர்களும் இணைந்து டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

வவுனியா மத்திய பேரூந்து நிலையம் மற்றும் வவுனியா நகர மத்தியிலிலுள்ள வர்த்தக நிலையங்களில் முன்பாகவுள்ள இடங்களை துப்பரவு செய்யும் பணி இன்று (03.08.2017) காலை 8.30மணி தொடக்கம் மதியம் 12.00மணி வரை இடம்பெற்றது.

வவுனியா பொலிஸார், வர்த்தகர்கள், நகரசபையினர் இணைந்து மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணியில் சுமார் 40க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் பல இடங்களில் டெங்கு நோய் தாக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கை முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

You might also like