வழிப்பிள்ளையாரை திருடிய நபர் சீ.சீ.டி.வி கமராவின் மூலம் சிக்கினார்

தலவாக்கலை – பெரிய மல்லியப்பு தோட்ட ஆலயத்தில் காணாமல் போன வழிப்பிள்ளையார் சிலையை மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி அதிகாலை ஆலயத்தின் வழிப்பிள்ளையாரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் குறித்த திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபரை சீ.சீ.டி.வி கமராவின் உதவியுடன் கைது செய்ததுடன், பிள்ளையார் சிலையையும் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர் தலவாக்கலையில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் இந்த சிலையை விற்க முற்பட்டதாகவும், தொடர்ந்து குறித்த வர்த்தகர் மறுப்பு தெரிவித்ததுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார்

மேலும், இந்த வர்த்தக நிலையத்தில் இருந்த சீ.சீ.டி.வி கமராவின் பதிவின் மூலம் சந்தேகநபரை கைது செய்ததுடன் சிலையையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபரை நாளை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like