வவுனியா புளியங்குளத்தில் டிப்பர் வாகனம் விபத்து : சாரதி படுகாயம்!

வவுனியா புளியங்குளத்தில் இன்று (04.08.2017) காலை 9.30மணியளவில் கனரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மல்லாவியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் புளியங்குளம் இராமனூர் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளனது .இவ் விபத்தில் டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like