புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் குடிநீர் இயந்திரத்தொகுதி திறப்பு விழா

வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தில் வடிகட்டும் குடிநீர் இயந்திரத்தொகுதி திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (04.08.2017) காலை 8.15மணியளவில் பாடசாலையின் அதிபர் சொ.கமலாம்பிகை தலமையில் இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட இவ் வடிகட்டும் குடிநீர் இயந்திர தொகுதியினை (01.மில்லியன் ரூபாய்) வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வட மாகாண சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

You might also like