கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவினர் விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அனுரசணையுடன் இரத்ததான நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வு இன்றைய தினம் (04) கமக்காம அமைப்புக்களின் ஏற்பாட்டில்இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவுகின்ற குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் கிளிநொச்சி மாவட்ட கமக்கார அமைப்புக்கள் ஒன்றிணைந்து குருதிக்கொடையினை செய்துள்ளனர்.

குருதிக்கொடை நிகழ்வில மாவட்டக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே ஆயகுலன், கமநல சேவை நிலையங்களின் பெரும்பாக உத்தியோகத்தர்கள் கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டு இதில் பெருமளவானோர் குருதிக்கொடை செய்துள்ளனர்.

You might also like