வவுனியா நகரப்பகுதியில் குரங்குளின் அட்டகாசம் அதிகரிப்பு : மக்கள் விசனம்

வவுனியா நகரப்பகுதியை அண்டியுள்ள மக்கள் குடியிருப்புக்களில் புகும் குரங்குகள் மக்களது பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரையண்டி உள்ள கற்குழி, குட்செட்வீதி, வைரவபுளியங்குளம், உள்வட்ட வீதி, வவுனியா நகரம், குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளில் நாளாந்தம் வந்து செல்லும் குரங்குள் அப்பகுதியில் உள்ள மக்களது வசிப்பிடங்களில் புகுந்து அவர்களது ஆடைகள், வீட்டு வளவில் உள்ள பொருட்கள், பயன்தரு மரங்களில் உள்ள காய்கள் மற்றும் பழங்கள் என்பவற்றை எடுத்துச் சென்று அயலில் அவற்றை வீசுவதுடன் சிலவற்றை தாம் உணவாகவும் உட்கொள்கின்றன.

வீதிகளில் குரங்குளின் செயற்பாடு காரணமாக விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் தினமும் குரங்குகளுக்கு காவல் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி நகரப்பகுதியில் உள்ள குரங்குளை காடுகளுக்குள்  விடுவதற்கு அல்லது விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

You might also like