கிளிநொச்சி வாழ் மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் விசேட அறிவித்தல்

நாட்டில் நிலவி வருகின்ற கடும் வறட்சி காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகின்ற பகுதிகளில் நீரை வீண்விரயம் செய்ய வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவருகின்ற வறட்சி காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதோடு இதன் காரணமாக 25,000 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில் குடிநீர்த் தட்டுப்பாடான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றபோதும், சில இடங்களில் குடிநீரானது வீண் விரயம் செய்யப்பட்டு வருகின்றது.

குடிநீரைப் பெற்றுக்கொள்கின்ற நீர் நிலைகளிலும் தேவையான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. எனவே விநியோகிக்கப்படுகின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வீண்விரயத்தினைத் தடுக்குமாறும் அனர்த்த முகாமைப்பிரிவு அறிவித்தல் விடுத்துள்ளது.

You might also like