சற்றுமுன் வவுனியாவில் ரயிலுடன் மோதிய பேருந்து : சாரதி உட்பட 6 பேர் காயம்

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று (04.08) மாலை 4 மணியளவில் வவுனியாவிலிருந்து பயணிகளுடன் பயணித்த வவுனியா-மெனிக்பாமிற்கான அரச பேருந்து ஒன்று  புகையிரத கடவையை கடக்க முயன்ற வேளையில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி ரஹீம் (வயது 30) படுகாயமடைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது. இப் புகையிரதகடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவை என்பது குறிப்பிடத்தக்கது.

காயத்திற்குள்ளானவர்கள் செட்டிகுளம் வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

 

You might also like