கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய மூவருக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சிப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மூவருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தினால் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய மூவரை கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்தே குறித்த மூவருக்கும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு சமுதாயம் சார் சீர்திருத்த கட்டளைச் சட்டத்தின் கீழ் பத்து நாட்கள் கட்டாய சமூக சேவைகளுக்கும் குறித்த மூவர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய இரண்டு பேருக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாவும் மற்றுமொரு நபருக்கு முப்பதாயிரம் ரூபாவும் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like