யாழில் இளைஞர்கள் இருவர் கைது! 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் 48 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

யாழ். கொக்குவில் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 48 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

You might also like