வவுனியா நோக்கி சென்ற ரயிலில் பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற இளம்தாய்

இளம் தாயொருவர் தனது பிள்ளைகளுடன் ரயிலில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

தாய் ஒருவர் தனது மகள்கள் இருவருடன் கல்கமுவ பிரதேசத்தில் ரயிலில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இதன்போது ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

பாரிய காயங்களுக்குள்ளான இவர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 7.40 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் இருந்து குதித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தாய் 23 வயதானவர் எனவும், அவரது 6 வயதுடைய மகளும், 3 வயதுடைய மகளுமே இவ்வாறு ரயிலில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் மூவரும் பழுகன்தெவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும்.

கல்கமுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like