130 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவு

130 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் பொலிஸார் சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். .

கைக்குண்டு, துப்பாக்கி ரவைகளை வைத்திருந்த தர்மசீலன் முனுசாமி மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எமில் லக்ஸ்மி காந்தன் ஆகியோரே இறுதியாக சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட இலங்கையர்களாவர்.

இவ்வாறு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவருக்கு பிரிட்டனும், புலிகளின் ஐந்து சிரேஸ்ட தலைவர்களுக்கு பிரான்சும் கனடாகவும் அடைக்கலம் வழங்கியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வர்த்தக கப்பல் பிரிவின் பிரதானிக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளதாகவும் அவருக்கு வவுனியா நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக இன்டர்போலினால் தேடப்பட்டு வந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 70 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like