விடுதலைப் புலிகளின் பதுங்கு குழியிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மன்னாரில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழிக்குள் இருந்து ஒருதொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாப்பாமோட்டை பிரதேசத்திலுள்ள பதுங்கு குழியொன்றில் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏழு மோட்டார் குண்டுகள் உட்பட ஆயுத தொகை ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த புலனாய்வு பிரிவு தகவல்களுக்கமைய குறித்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் 81 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் நான்கும், 60 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மூன்றும் உள்ளடக்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட உத்தரவிற்கமைய, குறித்த வெடிபொருட்கள் இராணுவ வெடிகுண்டு அகற்றும் பிரிவினால் கண்காணிக்கப்பட்டது.

இது தொடர்பில் அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like