உன்னை செஞ்சிடுவேன்.. ஜூலியை டார்ச்சர் செய்த ஓவியா

ஆரவ்வை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியதில் இருந்தே கூறிவருகிறார். ஆனால் அவரை தொடர்ந்து புறக்கணித்து வந்த ஆரவ் சமீபத்தில் உன்னை நான் எப்போதும் காதலிக்க மாட்டேன் என கூறிவிட்டார்.

அப்போதிருந்து ஓவியா அடிக்கடி விசித்திரமாக நடந்துகொள்கிறார். நேற்று இரவு ஜூலியை திட்டிதீர்த்த ஓவியா, காலை எழுந்ததும் எதுவும் நடக்காதது போல அவரை அழைத்து “பாட்டு பாடு” என கூறி நார்மலாக பேசினார்.

“பொய் சொன்னா உன்னை செஞ்சிடுவேன்.. எதுவும் பாக்கமாட்டேன்… என திட்டிவிட்டு, காலையில் இப்படி பேசுறா.. இனிமே இப்படி நடந்தா அவ்வளவுதான்.. என்ன பண்ணுவேன்னு தெரியாது” என கோபத்தில் ஜூலி மற்றவர்களிடம் கூறி புலம்பினார்.

You might also like