வவுனியா மக்கள் வங்கியின் ஏற்பாட்டில் புலமைப்பரிசில் வழிகாட்டல் கருத்தரங்கு

மக்கள் வங்கி வவுனியா கிளையின் ஏற்பாட்டில் இன்று (05.08.2017) வவுனியா கலாச்சார மண்டபத்தில் காலை 8.30 தொடக்கம் மதியம் 1.00மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் கருத்தரங்கு இடம்பெற்றது.

மக்கள் வங்கியின் வன்னி பிராந்திய முகாமையாளர் சிவா சிவக்கொழுந்து அவர்களின் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மக்கள் வங்கி முகாமையாளர் கு.கோடிஸ்வரன், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்,மாணவர்கள் , மக்கள் வங்கி பிராந்திய மற்றும் வவுனியா கிளை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜி.ஜங்கரன் ( வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) , கே.ஆர். கமலநாதன் ( பல்கலைக்கழகம் ,யாழ்ப்பாணம்) அவர்களின் விரிவுரையில் இடம்பெற்ற இவ் கருத்தரங்கில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like