வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி திடீர் இடமாற்றம்

வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய விஜயமுனி சோமரத்ன அவர்கட்கு திடீர் இடமாற்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவிசாவளை பகுதியில் காணப்படும் பொலிஸ்நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரியாக கடமையேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் வவுனியாவின் புதிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக அம்பலாங்கொடை பகுதி பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய உயர்பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொறுப்பேற்கவுள்ளார் எனவும் அறியப்படுகிறது

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கள ஊடகங்களில் வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் சில செயற்பாடு குறித்து விசனங்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

You might also like