சற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் விபத்து : மூவர் காயம்

வவுனியா வைரவப்புளியங்குளம் வைரவர் வீதி ஓழுங்கையில் இன்று ( 17.01.2017) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி மற்றும் கப்ரக வாகன விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வைரவர் கோவில் வீதியுடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியோன்று சென்று கொண்டிருந்த சமயத்தில் வீதியில் நின்ற கப்ரக வாகனம் தீடிரேன பின் பக்கம் நோக்கி ( ரிபேஸ்) பயணித்தது. இதனால் கப்ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறுவன் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

You might also like