யாழில் பொலிஸ் அதிகாரிகள் மீது வாள்வெட்டு! மேலும் ஒரு சந்தேகநபர் கைது

யாழ். கொக்குவில் பகுதியில் வைத்து பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொக்குவில், அம்பாள் வீதியைச் சேரந்த புஸ்பராஜா தக்சன் எனும் இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த இளைஞர் பொலிஸார் மீது வாள்வெட்டினை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொலிஸாரின் விசாரணைகளில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் முன்னாள் போராளி என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like