மது போதையில் வாகனம் ஓட்டிய பெண் கைது

மதுபானம் அருந்தி விட்டு வான் ஒன்றை ஓட்டிச் சென்ற, சாரதி பயிற்சி நிலையத்தின் பெண் ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை பிலியந்தலை – போக்குந்தர சந்திப் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வீதியில் குறுக்காக வாகனத்தை நிறுத்தியிருந்தால் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அந்த பெண்ணைப் பரிசோதித்த போது அவர் மதுபானம் அருந்தி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்னர் பிலியந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மேற்கொண்ட பரிசோதனையில் பெண் மது அருந்தி இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

34 வயதான சந்தேகநபரான இந்தப் பெண் வேறு ஒருவருடன் விருந்து ஒன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த போதே கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

You might also like