இலங்கையின் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு படையெடுப்பு: 15 பேர் அடுத்த வாரம் பயணம்

சீனாவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கையின் சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலத்தில் அந்நாட்டுக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ஹி ஸியான்லியங் Yi Xianlian தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று அடுத்த வாரம் சீனாவுக்கு செல்ல உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நேற்று சீனாவால் டிஜிட்டல் உபகரணங்கள் வழங்கப்பட்ட நிகழ்வின்போதே அவர்கள் மேற்படி கருத்துக்களை வெளியிட்டதாக சீன ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காகவே 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சீனா செல்ல உள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையை சீனா வரவேற்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like