வவுனியா தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் சிரம சக்தி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் இளைஞர் பாராளுமன்றத்தின் ஊடான இளைஞர் கழகங்களின் சமூக அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழாக வழங்கப்பட்ட வவுனியா தோணிக்கல் இளங்கோ இளைஞர் கழகத்தின் குழாய் கிணறு மற்றும் மலசல கூட தொகுதிக்கான ஆரம்ப நிகழ்வு இளங்கோ இளைஞர் கழகத்தின் தலைவர் திரு நிதர்ஷன் தலைமையில் 04/08/2017 அன்று நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு ஆர்.சசிகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் திரு ரவி, தீடீர் மரண விசாரணை அதிகாரி திரு லாசர் சுரேந்திரசேகரன், வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன முன்னாள் தலைவர் திரு தே.அமுதராஜ், மாவட்ட சம்மேளன உறுப்பினர் திரு நிபாத் ஆகியோருடன் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

 

You might also like