பட்டாணிச்சூரில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் வைத்தியசாலையில்

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து நெளுக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வேப்பங்குளத்திலிருந்து வவுனியா நகருக்கு சென்ற மோட்டார் சைக்கிளும் பட்டாணிச்சூர் முதலாம் ஒழுங்கைக்கு அருகே எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.​

You might also like