வவுனியாவில் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான கடின பந்து துடுப்பாட்ட போட்டி.!

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரி   கடினப்பந்து துடுப்பாட்ட அணிகளினை பலப்படுத்தும் முகமாக இந்துவின் 15 வயதின் கீழான அணிக்கும் 19 வயதின் கீழான அணிக்கும் இடையிலான கடின பந்து  சிநேகபூர்வ துடுப்பாட்ட போட்டி 06/08/2017 அன்று வவுனியா கோவில்குளம் ஐக்கிய நட்ச்சத்திர விளையாட்டு மைதானத்தில் ஆசிரியர் திரு. சிவதர்சன் அவர்களின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இவ் துடுப்பாட்ட போட்டியினை புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், புளொட் இளைஞரணியின் வவுனியா  மாவட்ட அமைப்பாளர் திரு வ.பிரதீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்தார்கள்.

You might also like