கடற்புலிகளின் தளபதி சூசையின் வீட்டை பார்வையிட மக்களுக்கு அனுமதி?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்புலிப் படை தளபதி சூசையின் வீடு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையில் அமைந்துள்ளது.

குறித்த வீட்டை தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் (mega) ஒன்று குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடற்புலிப்படை தளபதி சூசையின் வீட்டைப் பார்ப்பதற்கு தென்னிலங்கையில் இருந்து செல்லும் மக்களை அவர்கள் அனுமதிப்பதாகவும், தமிழ் மக்களை புறக்கணிப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் குறித்த நிறுவனத்தின் செயற்பாடு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை சீர்குலைப்பதாக பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like