பச்சிலைப்பள்ளி பிரதேசக் காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள காடுகளில் ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதாக வனவள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எங்களது ஆளுகைக்குள் காணப்படுகின்ற காடுகளில் பரிசோதனைக்காக சென்ற போதே அங்கு ஆபத்தான வெடிப்பொருட்கள் காணப்படுவதனை அவதானித்தோம்.

வெடிக்காத நிலையில் காணப்படும் வெடிப்பொருட்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் எவ்வேளையிலும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

எனவே உரிய தரப்பினர் அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டும் எனவும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like