சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பொங்கல் விழா

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த பொங்கல் விழா நிகழ்வு இன்று காலை கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பண்ணையில் நடத்தப்பட்டது.

இந்த பொங்கல் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற பொங்கல் நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் அமைக்கப்பட்ட நாகதம்பிரான் கோவிலில் இடம்பெற்ற சிறப்பு வழிபாட்டிலும் கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான இணைந்த கட்டளைத்தளபதி, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க, சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like