வவுனியாவில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த அதிபர் மீது விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு

வவுனியா வடக்கு வலயத்தில் அதிபராக கடமையாற்றும் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வைத்து மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரியவந்த நிலையில், குறித்த மாணவியின் பெற்றோரால் நையப்புடைக்கப்பட்டார்.

குறித்த அதிபர் தொடர்பில் இதுவரை கல்வித் திணைக்களமோ, பொலிசாரோ, சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிபர் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையே அழைத்து வந்து துஸ்பிரயோகம் செய்ததாகவும், இது தொடர்பில் மாணவியின் பெற்றோர் அதிபருடன் முரண்பட்ட போதும், மாணவியின் எதிர்காலம் குறித்து இதுவரை முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என தெரியவருகிறது.  குறித்த சம்பவம் தொடர்பில் அதிபரின் வீட்டிற்கு அண்மித்ததாக வசிக்கும் பலருக்கும் தெரிந்திருந்த போதிலும் அது தொடர்பில் எந்த முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் ஊடகங்களில் இச் செய்தி வெளியானதையடுத்து குறித்த அதிபர் தலைமைறைவாக இருப்பதாகவும் அவர் மீத எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

You might also like