பதவிவிலக தீர்மானித்த ப.சத்தியலிங்கம் தனக்கு நெருங்கிய ஊடகவியலாளர்களுடன் இரகசிய சந்திப்பு

வடமாகாண சபை அமைச்சு வாரியத்தில் ஏற்ப்பட்ட ஊழல்கள்  தொடர்பான குழப்பங்களுக்கு தீர்வுகாணும் நோக்கோடு வடக்கு மாகாண முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவினால் குழம்பிப்போன தமிழரசுக்கட்சி தாமாக அமச்சுப்பதவியை தியாகம் செய்வதாக காட்டும் முயற்ச்சியாக இன்று (07.08.2017) வவுனியாவில் தனக்கு நெருக்கமான சில ஊடகவியலாளர்களை மட்டும் அழைத்து வடக்குமாகாண சுகாதார அமைச்சர்  இரகசிய ஊடகச் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

குறித்த சந்திப்பிற்கு தனக்கு மிகவும் நெருக்கமான ஊடகவியலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்ததுடன் வவுனியாவைத் தளமாக கொண்டியங்கும் பல ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் புறக்கணித்து தனது முடிவை அறிவித்துள்ளார் என முழுநேர ஊடகவியலாளர்கள் பலர் தாம் சார்ந்த ஊடக சங்கத்திற்கு முறையிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் ஊடகவியலாளர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில  வினவுவதற்காக அவரின் தனிப்பட்ட செயலாளரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது  அந்த அழைப்பு அவரால் நிராகரிக்கப்பட்ட நிலயில் நடந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்ட முடிவுகளை வவுனியா ஊடகவியலாளர்கள் கொழும்பு ஊடகங்கள் மூலமே அறிய முடிந்துள்ளது.

You might also like