கிளிநொச்சியில் தொடர்ந்தும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி, மலையாளபுரம் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்கள் பாவனைக்குதவாத நிலையில் காணப்படுவதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் காணி ஒன்றினைச் சுத்தப்படுத்தும் வேலைகளில் உரிமையாளர் ஈடுபட்டபோதே கிணற்றில் இருந்து மேற்படி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like