​​வவுனியாவில் அன்னம்மா சிற்றம்பலம் அறக்கட்டளையின் அனுசரணையில் மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு

திருமதி அன்னம்மா சிற்றம்பலம் அறக்கட்டளையின் அனுசரணையில் அஸ்திரம் மக்கள் நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கூமாங்குளம் கிராமத்தில் முதியவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு அஸ்திரம் இளைஞர் கழக தலைவரும் அன்னம்மா சிற்றம்லம் அறக்கட்டளை அமைப்பின் செயற்திட்ட அதிகாரி நா.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் இணைப்புச் செயலாளர் பா.சிந்துஜன் அஸ்திரம் மமக்கள் நற்பனி மன்ற பொதுசெயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூமாங்குளம் இளம் விவசாய கழக தலைவர் கோ.ரகுவரன் மற்றும் கூமாங்குளம் சியிவிநாயகர் ஆலய தலைவர் ந. ஆறுமுகம் மற்றும் பயனாளிகள் ,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

You might also like