யாழ் இளைஞர்கள் மீது கிராம மக்களால் கடும் தாக்குதல்! காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் தனிப்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரின் முறையற்ற உறவுமுறை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மனைவியின் செயற்பாடு காரணமாக மனஉளைச்சல் அடைந்த கணவன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

விஷம் அருந்திய நிலையில், பாதிக்கப்பட்ட கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் குணமடைந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றிருந்த அவரின் நண்பர்கள், குழப்பத்திற்கு காரணமான பிரிதொரு நபரை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் யாழிலிருந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். யாழ். பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 35, 25, 19 வயதுடையவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி இருந்தனர்.

அண்மைக்காலமாக யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுத் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like